News October 18, 2025
பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய மாணவர்கள்

அந்த காலத்து 90ஸ் கிட்ஸ் தேர்வு எழுத பயந்துவிட்டு வயிறு வலி, காய்ச்சல் அடிப்பதாக கதைவிடுவார்கள். ஆனால், இன்றைய 2K கிட்ஸ் தேர்வை நிறுத்த பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் அளவிற்கு துணிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில், போலியான கல்லூரி அறிக்கையை தயாரித்த மாணவர்கள் அதை SM-ல் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக 2 மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.
Similar News
News October 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 18, ஐப்பசி 1 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சிறப்பு: மாதப்பிறப்பு, விஷு புண்ணிய காலம், மகா பிரதோஷம். ▶வழிபாடு: சிவன் கோயில்களில் விஷு தீர்த்தம், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.
News October 18, 2025
இந்தியா அமைதியாக இருக்காது: PM மோடி

கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் போர்கள், பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8%ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும், ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிகல் ஸ்டிரைக் என பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
Sports Roundup: பேட்மிண்டனில் லக்ஷயா சென் ஏமாற்றம்

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.