News September 25, 2025
திமுக ஆட்சியில் மாணவர்களின் கைகளில் அரிவாள்: EPS

5-ஆவது மாணவரால் 3-ம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவை அரசு நடத்திவரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பள்ளிக்கு படிக்க செல்ல வேண்டிய மாணவர்கள், கையில் அரிவாளை கொண்டு செல்லும் நிலை உள்ளதாகவும் விமர்சித்தார். நெல்லையில், இன்று 9-ம் வகுப்பு மாணவர், சக மாணவரை பள்ளியிலேயே அரிவாளால் வெட்டியது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 26, 2025
ரஷ்ய துணை பிரதமருடன் PM மோடி சந்திப்பு

4-ம் ஆண்டு உலக உணவு இந்தியா சர்வதேச கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது ரஷ்ய துணை பிரதமர் Dmitry Patrushev – PM மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது விவசாயம், உரங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக மோடி X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News September 26, 2025
மார்க்குக்கு கொஞ்சம், வாழ்க்கைக்கு கொஞ்சம்: SK

எனது அப்பா ஒருவேளை சாப்பிட்டு பள்ளி சென்றார், நான் 3 வேளையும் சாப்பிட்டு பள்ளி சென்றேன் என்ற சிவகார்த்திகேயன், கல்வி அனைவரையும் மாற்றும் என்பதை தன் குடும்பத்திலேயே பார்த்ததாக கூறியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் பேசிய அவர், வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்கனும் என்றால் படியுங்கள் என்றார். மதிப்பெண்ணுக்காக கொஞ்சமும், வாழ்க்கைக்காக கொஞ்சமும் படியுங்கள் என்றும் SK அறிவுறுத்தினார்.
News September 26, 2025
ராசி பலன்கள் (26.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.