News September 6, 2025

மாணவர்கள் பையில் காண்டம்ஸ், கத்தி… அதிர்ச்சி!

image

அகமதாபாத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகளை பரிசோதித்த ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், பைகளில் நோட்டு புத்தகங்கள் தவிர காண்டம்ஸ், கருத்தடை மாத்திரைகள், ஆல்கஹால், ஆபாச புத்தகங்கள், பணம், ஆடம்பர பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சிறுவயதிலேயே ஆன்லைனில் தேவையில்லாத நிறைய விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதுதான் என உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Similar News

News September 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

News September 6, 2025

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

image

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2025

பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

image

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!