News May 28, 2024
மாணவர்கள் தொடர்ந்து இலவசமாக பயணிக்கலாம்

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய வருடத்திற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பாஸ் இல்லாதவர்கள், பள்ளி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
Similar News
News March 3, 2026
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் படுகொலை

இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் ஏவுகணை தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரான சையத் மஜீத் எப் அல்-ரேசாவும் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல், US-ன் நடத்திய முதல்நாள் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் <<19266093>>அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டார்<<>>. இதனையடுத்து பதவியேற்ற மறுநாளிலேயே சையத் மஜீத் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஈரான் அரசு இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை.
News March 3, 2026
சங்கீதா விவாகரத்தில் ட்விஸ்ட்.. மொத்தமாக மாறுகிறது

விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சங்கீதாவுடன் விஜய் தரப்பு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக இன்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஜய்யின் சமரசத்தை ஏற்று சங்கீதாவும் விவாகரத்து மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இருதரப்பினரிடம் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
இன்று சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா!

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.


