News August 16, 2024
NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
ஆந்திரா, கேரளா, கர்நாடகா பிறந்த தினம் இன்று!

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.
News November 1, 2025
உலகின் மிகவும் கஷ்டமான பரீட்சைகள் இவைதான்!

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான பரீட்சைகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான பரீட்சைகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?


