News January 15, 2025
சென்னை IITயில் மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை IIT கேண்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் பேரில், உ.பி.யைச் சேர்ந்த கேண்டீன் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் அத்துமீறல்களுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து கல்லூரி, பல்கலை.,களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்வது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Similar News
News December 8, 2025
விஜய்யின் புதிய முயற்சி இதுவா?

தவெக கூட்டத்துக்காக புதுச்சேரி உப்பளத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 3 கூடுதல் நுழைவாயில்கள், தண்ணீர், நாற்காலிகள், லைட் என அனைத்தும் போடப்படும் நிலையில், ஸ்டேஜ் மட்டும் அமைக்கப்படாது என தகவல் கசிந்துள்ளது. ஏன்? கூட்டத்தில் விஜய் பேசமாட்டாரா? என கேட்க வேண்டாம். ஏனென்றால், இம்முறை விஜய் பஸ்சில் இருந்தபடியே கூட்டத்தில் பேச முடிவெடித்திருப்பதாக கூறப்படுகிறது.
News December 8, 2025
ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

சமீபமாக டிரம்ப், <<18356688>>புடினுக்கு ஆதரவாகவும்<<>>, <<18364724>>உக்ரைனை விமர்சித்தும்<<>> வருகிறார். இந்நிலையில், USA-வின் அமைதி திட்டத்தை ஜெலென்ஸ்கி இன்னும் படிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மக்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என்றும், ஆனால் ஜெலென்ஸ்கி இதை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News December 8, 2025
Whatsapp யூசர்களுக்கு Alert.. இதை செக் பண்ணுங்க..

உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ➤திடீரென லாக் அவுட் ஆனால் ➤நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தால் ➤Linked Devices-ல் அறிமுகமில்லாத LogIn-கள் ➤புதிய குரூப்கள் மற்றும் Contact-கள் இடம்பெற்றிருந்தால் உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளது. உடனே <<17288605>>இதை<<>> செய்து சரி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க, SHARE THIS.


