News August 20, 2024
மாணவி வன்கொடுமை: மேலும் இருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமன் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்ட சிவராமன் தப்பி ஓட முயன்ற போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் CPM

திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு CPM தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த CPM மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி எண்ணிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், CPM-ஐ இதுவரை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
News March 22, 2026
சரசரவென சரியும் வெள்ளி விலை!

கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹40,000 குறைந்துள்ளது. கடந்த 13-ம் தேதி சில்லறை விற்பனையில் கிராம் ₹290-க்கு விற்பனையான வெள்ளி, தற்போது ₹250 ஆக உள்ளது. அதேபோல், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹2,50,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 15% விலை சரிந்ததே, இந்த கடும் வீழ்ச்சிக்கு காரணமாகும். வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாம்.
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கிறதா பாஜக? தமிழிசை

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய தமிழிசை, கூட்டணி ஆட்சி பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேநேரம், தேர்தல் முடிவைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


