News June 15, 2024
அனைத்து பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி

தமிழத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். இப்பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்து பார்த்து, உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நடைமுறை, ஏற்கெனவே பல பள்ளிகளில் அமலில் உள்ளது.
Similar News
News September 12, 2025
அட! PAN Card எண்ணுக்கு இதுதான் அர்த்தமா..

PAN CARD-ல் வரும் முதல் 3 எழுத்துகள் தானியங்கி முறையில் உருவாக்கப்படும். ➤இதில் வரும் 4வது எழுத்து ’P’ என்றால் அது தனிநபருடைய கார்டு எனவும், ’C’ என்றால் நிறுவனத்தின் கார்டு எனவும் அர்த்தம். ➤உங்கள் பெயரின் முதல் எழுத்து 5வது எழுத்தாக இடம்பெறுகிறது. ➤அடுத்து வரும் 4 எண்கள் சீரியல் எண்களாகும். ➤இறுதியாக வரும் எழுத்து, ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் தனித்துவமான எழுத்தாகும். SHARE.
News September 12, 2025
விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’

விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’ நடைபெறுகிறது. இதில், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, MP-க்கள் பரத், ஹரீஷ் பாலயோகி, YSR காங்., தலைவர்கள் ஷஜாலா ராமகிருஷ்ணா ரெட்டி, புகானா ராஜேந்திரநாத் ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான AP வளர்ச்சி குறித்து தலைவர்கள் பேச உள்ளதால், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
News September 12, 2025
வீட்டில் பச்சிளம் குழந்தை இருக்கா? கவனமா இருங்க!

10 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையை பேணி பாதுகாப்பது பெற்றோரின் கடமை. மகாராஷ்டிராவில் 7 மாத குழந்தை, கீழே கிடந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட, அது தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தவழும் வயதில் எதை பார்த்தாலும், குழந்தைகள் வாயில் எடுத்து போட்டுக் கொள்ளும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், விழிப்புடன் இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனை அனைவரும் ஷேர் பண்ணுங்க.