News March 13, 2025

மாணவியை வீடியோ எடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

image

இன்ஸ்டாகிராமில் பழகிய கல்லூரி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி 16 மாதங்களாக 7 பேர் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் பனாஸ்கந்தா பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், தனக்கு நடந்த அவலத்தை கூறியபோது போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொடூரத்தை செய்த விசால் சவுத்ரி, அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள்..

Similar News

News March 4, 2026

மக்களை விட பணம்தான் திமுகவுக்கு முக்கியமா? சீமான்

image

அனைத்து குற்றங்களுக்கும் காரணமான கஞ்சா விற்பனையை திமுகவால் தடுக்க முடியவில்லை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாங்குநேரி கொலைக்கு கண்டனம் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் திமுக குறைந்தபட்சம் மதுக்கடைகளை கூட மூடவில்லை என்றார். மேலும், இதை செய்வதில் திமுகவிற்கு என்ன தயக்கம் எனவும் மக்களின் பாதுகாப்பைவிட அரசின் வருமானம்தான் திமுகவுக்கு முக்கியமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 4, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $222.88 (இந்திய மதிப்பில் ₹20,426) குறைந்து $5,129.72-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $6 குறைந்து $83.21-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

News March 4, 2026

திமுகவுக்கு இந்த அகம்பாவம் இல்லை: ரகுபதி

image

NDA கூட்​டணி என்​பது இடி​யாப்​ப சிக்​கல் போன்றது. அதில், யார் பெரிய​வர் என்​பது இது​வரை தெரிய​வில்​லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதையும், திமுக கூட்​ட​ணி​யை​யும் ஒப்​பிட முடி​யாது என்ற அவர், மக்​களிடம் சாதனைகளை சொல்லியே வாக்குகளை பெறமுடியும் என்றார். மேலும், தேர்​தலில் சவால்கள் இல்லை என்று அகம்​பாவ​மாக சொல்ல முடியாது எனவும் திமுக எது வந்​தா​லும் சமாளிக்கும் என்றும் பேசியுள்ளார்.

error: Content is protected !!