News August 13, 2025
மாணவன் திடீர் மரணம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

விழுப்புரத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, <<17390065>>11-ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்<<>> திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் தெரியாது என்றும் டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளவயது மாரடைப்பு மரணங்கள் அண்மைகாலமாக அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
Similar News
News August 13, 2025
சஞ்சுவுக்கு பதில் ஜடேஜாவைக் கேட்கும் RR

IPL 2026 சீசனில் சஞ்சு சாம்சனை வாங்க CSK மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சஞ்சுவை கொடுப்பதாக இருந்தால் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை RR நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியின் தளபதியாக விளங்கும் ஜடேஜாவை கேட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும், ஜடேஜாவை CSK விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளதாம்.
News August 13, 2025
டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார் காலமானார்!

1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் & டிசைனிங் ‘ஜாம்பவான்’ குமார்(67) உடல்நலக் குறைவால் காலமானார். 1983-ல் வெளியான ‘சலங்கை ஒலி’ படத்தில் தொடங்கி ‘சபாஷ் நாயுடு’ வரை தொடர்ச்சியாக கமலுடன் குமார் பணிபுரிந்துள்ளார். தேவர் மகன், விருமாண்டி, தளபதி, படையப்பா, கில்லி, வல்லவன் என பல Iconic பட போஸ்டர்கள் இவரின் கைவண்ணம்தான். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 13, 2025
டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இனி மது பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?