News March 29, 2025
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.
Similar News
News November 18, 2025
பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.