News December 26, 2024
மாணவி வன்கொடுமை: FIRல் அதிர்ச்சித் தகவல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் FIR வெளியாகியுள்ளது. அதில், மாணவி தனது ஆண் நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் எனவும், தந்தைக்கு அதனை அனுப்புவேன் என்றும் மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அடிபணியவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.
News July 8, 2025
வெரிக்கோசில் அறிகுறிகள் தெரியுமா?

விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால் வெரிக்கோசில் ஏற்படுகிறது. இதன் முக்கிய அறிகுறிகள்: விதைகளில் மிதமானது முதல் தீவிர வலி *ரத்தக் குழாய்களில் வீக்கம் தெளிவாக தெரிவது *விதைகள் அவற்றின் வழக்கமான அளவிலிருந்து சிறிதாகுதல் *நீண்ட நேரம் நின்றாலோ, எடை தூக்கினாலோ அசவுகரியமாக உணர்வது. இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரை ஆலோசியுங்கள்.
News July 8, 2025
மைக்கில் பேசினால் மன்னரா? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி

மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக் கூடாது என பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. சைவம், வைணவம் தொடர்பாக ஆபாசமான முறையில் பேசிய Ex அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் பொது இடங்களில் யோசித்து பேச வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தால்தான் பொன்முடி தனது பதவியை இழந்தார்.