News August 19, 2024
மம்தா குறித்து பதிவிட்ட மாணவி கைது!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக, வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டதாக, மாணவியை போலீசார் கைது செய்தனர். கீர்த்தி ஷர்மா என்ற கல்லூரி மாணவி தனது இன்ஸ்டாவில், “பயிற்சி மருத்துவர் வன்படுகொலை வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை போல் மம்தாவும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும். நீங்கள் இதை செய்யாவிட்டால், நான் ஏமாற்றமடைவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
Similar News
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
News March 11, 2026
IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


