News February 22, 2025

2000 ஆண்டுகளாக போராட்டம்: சேகர்பாபு

image

சிதம்பரத்தில் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார். இறைவன் முன், அனைவரும் சமம். இதற்கான சட்டப் போராட்டம், 2,000 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. தரிசனத்திற்கு எந்த வழியாக பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

Similar News

News February 22, 2025

நைட்ல கண்டிப்பா பல் துலக்குங்க…

image

இரவில் உறங்கச் செல்லும் முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டுமாம். இல்லையென்றால் இதய நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு எச்சரிக்கிறது. அதிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ரிஸ்க் அதிகம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இரவில் உறங்கும்போது சாலிவா உற்பத்தி குறைந்து விடுவதால் பற்களில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்கள் எளிதாக உடலுக்குள் நுழைவதே இதற்கு காரணமாம்.

News February 22, 2025

முன்னாள் ராணுவ துணைத் தளபதி காலமானார்

image

இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி மோதி தார் காலமானார். 1995 முதல் 1996 வரை துணை ராணுவத் தளபதியாக பதவி வகித்துள்ள அவர், அதற்கு முன்பு தென்பிராந்திய படைகளின் தளபதியாக 1994-1995 வரை இருந்துள்ளார். 1965 பாேர், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1971 போரில் அவர் காயமும் அடைந்தார். புனேவில் வசித்து வந்த தார் (88), முதுமை காரணமாக காலமானார்.

News February 22, 2025

EXP ரயில் தடம் புரண்டு விபத்து

image

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், மின்கம்பத்தில் மோதி ரயில் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

error: Content is protected !!