News December 5, 2024
50 ஆண்டுகளில் இல்லாத பலத்த நிலநடுக்கம்: புதுத் தகவல்

தெலுங்கானாவில் நேற்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.3 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது ஆந்திரா, மகாராஷ்டிராவிலும் உணரப்பட்டது. சுமார் 10 வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகளால், மக்கள் பீதியடைந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், தெலுங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது.
Similar News
News April 29, 2025
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடைந்தது..

சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மார்ச் 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், இலவச பட்டா விதிகளில் திருத்தம், கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 5.31 மணி முதல் நாளை மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.
News April 29, 2025
வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. துணை முதலமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அடாவடி கடன் வசூலால் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.