News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
Similar News
News December 10, 2025
தருமபுரி:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

தருமபுரி:மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


