News May 18, 2024

இதயத்துக்கு எமனாக மாறும் மன அழுத்தம்

image

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மன அழுத்தத்தை குறைக்க, தினமும் குறைந்தது 30 நிமிடம் காலையில் தியானம் செய்து வரலாம். உடற்பயிற்சி, முறையான தூக்கம், சரியான உணவு முறைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Similar News

News August 27, 2025

BREAKING: தங்கம் விலையில் பெரிய மாற்றம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹75,120-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹9,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் ₹1,680 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News August 27, 2025

அரசியல்வாதி போல் விஜய் நடக்க வேண்டும்: தமிழிசை

image

அரசியலுக்குள் விஜய் நுழைகிறார் என்றால், ஒரு நடிகரைப் போல் அல்லாமல் அரசியல்வாதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தொண்டர் தள்ளிவிடப்பட்டது தொடர்பாக <<17529771>>விஜய்<<>> மற்றும் பவுன்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை பேணப்பட வேண்டும் என்றார்.

News August 27, 2025

கொழுக்கட்டையின் கதை தெரியுமா?

image

புராணங்களின் படி, ஞானபாலி என்னும் அரசன், ருத்ரயாகத்தின் நடுவே ஒற்றைக்கண் பூதனாகி, உயிர்களை விழுங்க தொடங்கினான். தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தபோது, அவர் ஞானபாலியை கொழுக்கட்டை வடிவில் மாற்றி விழுங்கினார். அவன் பசியை தீர்க்கவே விநாயகருக்கு கொழுக்கட்டையை படைப்பதாக கூறப்படுகிறது. கொழுக்கட்டையின் தத்துவம்: இனிப்பு பூரணம் ஆன்மாவின் இனிமையையும், வெள்ளை மேலடுக்கு சுத்தமான மனதையும் குறிக்கிறது. SHARE IT.

error: Content is protected !!