News September 29, 2024
இதயத்தை பலப்படுத்தி வருகிறேன்: வானதி நறுக்

உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், சர்வதேச இதய தினத்தையொட்டி இன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால், இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை செய்து நானும் இதயத்தை பலப்படுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.
Similar News
News August 14, 2025
தமிழகத்தில் 2,500 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2.513 உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு & D.Cop., வயது வரம்பு: 18 – 32. விண்ணப்பக் கட்டணம்: ₹500. ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.29. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News August 14, 2025
நான் சுயநலமாக சிந்தித்தது கிடையாது: வைகோ

சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம், அது மனித இயல்பு என வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் சுயநலமாக சிந்தித்ததில்லை, மக்களுக்காக குரல் கொடுக்கும் நானே ரியல் பெரியாரிஸ்ட் என பெருமிதம் தெரிவித்தார். தனது தாயார், தம்பி, மகன் என மக்களுக்காக சேவை செய்யும் தனது குடும்பம் தியாக குடும்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 14, 2025
ஒரே தியேட்டரில் தனுஷ், லதா ரஜினிகாந்த்

‘கூலி’ பட ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு தான் லதா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்துள்ளார். மனைவியை விட்டு பிரிந்த தனுஷ், தனது தலைவரை தரிசிப்பதை விடமாட்டார் என அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். லோகேஷ், அனிருத், ஸ்ருதி ஆகியோர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கின்றனர்.