News March 28, 2025
தெருநாய் தொல்லை… பிரதமரிடம் முறையிட்ட எம்.பி

தெருநாய் தொல்லை குறித்து பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார். இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளார். போதுமான நிதி இல்லாததால், நகராட்சிகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
ஜம்மு காஷ்மீரில் வந்தே பாரத்.. ஏப்ரலில் தொடங்கி வைக்கும் PM

ஜம்மு காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காத்ரா – ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. 272 கி.மீ. தொலைவை கொண்ட ரெயில் சேவை திட்டத்திற்கான பணியானது கடந்த மாதம் நிறைவடைந்தது.
News March 31, 2025
பலாத்கார வழக்கில் கைதான மோனாலிசா இயக்குநர்!

கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் பலாத்கார வழக்கில் டெல்லி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.யின் இளம்பெண் ஒருவர் சனோஜ் தன்னை, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீடியோக்களை வைத்து மிரட்டியதாக புகார் அளித்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் தான், மோனாலிசா ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
News March 31, 2025
பிரியங்கா காந்தியின் கார் வழிமறிப்பு.. யூடியூபர் கைது

மலப்புரத்தில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி சென்றபோது அவரது கார் வழிமறிக்கப்பட்டது. பிரியங்காவின் கான்வாய் ஹாரனால் எரிச்சலடைந்த அனீஷ் ஆபிரகாம் என்ற யூடியூபர் திடீரென வழிமறித்துள்ளார். காவல்துறையினர் காரை சாலையின் ஓரமாக எடுத்துச் செல்ல கூறிய போது அவர்களிடமும் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். போலீசார் அவரை உடனடியாக கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.