News April 20, 2025
விநோதம்: இறந்தவர்களை மணக்கும் பெண்கள்!

சீனாவில் இறந்தவர்களை மணக்கும் விநோத பழக்கம் உள்ளது. இறந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில், பிரம்மச்சாரியாக இருப்பதை தவிர்க்க இந்த பேய் திருமணம் செய்யப்படுகிறது. இறந்த மகன், மகளுக்கு ஃபெய் சுங் மாஸ்டரை நியமித்து வரன் தேடுகிறார்கள். வரன் அமைந்ததும், கல்லறையில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு சீன அரசு தடைவிதித்திருந்தாலும் இன்னும் தொடர்கிறது.
Similar News
News December 7, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டத்தின் முக்கியமான கோயில் திருவிழா என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


