News February 3, 2025

STR 49: தாறுமாறாக இறங்கிய போஸ்டர்!

image

சிம்புவின் 41வது பிறந்தநாளையொட்டி அவரது 49வது படம் குறித்த போஸ்டரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்காலிகமாக STR 49 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் காலேஜ் புத்தகத்துடனும், அதில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சிம்பு வெறித்தனமான இருக்கிறார். போஸ்டர் பற்றி கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News March 7, 2026

தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

image

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 7, 2026

விஜய்க்கு மேலும் அதிர்ச்சி.. கண்ணீர்விட்ட புஸ்ஸி ஆனந்த்

image

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதற்கு அருகிலுள்ள வில்லிவாக்கத்தில் போட்டியிட புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டாராம். ஆனால், அங்கு ஆதவ் களமிறங்குவார் என விஜய் கூறியதால் அவர் மனமுடைந்ததாக தகவல் கசிந்துள்ளது. பின்னர், நேற்று வந்த சிலருக்காக நீண்டநாள் விசுவாசியான தன்னை அவமதிப்பதா என விஜய்யிடம் அவர் கண் கலங்கினாராம். விவாகரத்து பிரச்னையை தொடர்ந்து, சீட் சிக்கல் எழுந்துள்ளதால் விஜய் அப்செட்டில் உள்ளாராம்.

News March 7, 2026

இந்தியாவின் பாதுகாப்பில் ஈரானின் கப்பல்

image

இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட ஈரானின் IRIS DENA போர்க்கப்பலில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்தியா உதவவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், Vizag-ல் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற IRIS LAVAN போர்க்கப்பல் தற்போது பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக ஈரான் கூறிய நிலையில், இந்தியா உடனடியாக IRIS LAVAN-ஐ கொச்சியில் நிறுத்த அனுமதித்துள்ளது.

error: Content is protected !!