News September 14, 2024

கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மிக தூரத்தில் புயல் உருவாகியிருப்பதைக் குறிக்கிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

Similar News

News November 17, 2025

கடலூரில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு -கலெக்டர்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் நவ.21-ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

வழிமறித்து தாக்கியவர் கைது

image

கீழிருப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ்(23) மற்றும் சிவராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் சென்றுள்ளனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார் (48), தளபதி (45) அகிய இருவரும் ரோட்டில் வழிமறித்து நின்றனர். இதனை கேட்ட சூரிய பிரகாஷ், சிவராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டி விடுத்தனர். காயமடைந்த சிவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். காடாம்புலியூர் போலீசார் ஞானேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!