News November 30, 2024

புயல் வார்னிங்: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

image

ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்கும் போது அதிகனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, நிர்வாக காரணங்களால் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. Share It.

Similar News

News April 26, 2025

இந்தியா, பாக். துப்பாக்கி சண்டை.. எல்லையில் பதற்றம்

image

இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

News April 26, 2025

பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்வு

image

தங்கம் விலை அதிகரித்தபோதிலும், வெள்ளி விலை கடந்த 2 வாரமாக மாறாமல் இருந்தது. 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!