News November 25, 2024
தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
எல்.முருகன் மீது அதிருப்தியில் அமித்ஷா.. பின்னணி என்ன?

நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டை அடுத்து, எல்.முருகன் மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டு மேடையில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் 10 பேரை பாஜகவில் இணைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாராம் முருகன். ஆனால், Ex திமுக பிரமுகர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜகவில் இணைந்தார். இதனால் அமித்ஷா கடும் அப்செட்டில் இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 24, 2025
இந்திய கிரிக்கெட் அணியும்.. ஜெர்சி ஸ்பான்சர்களும்!

*SAHARA: திவாலானதை தொடர்ந்து, 2012-ல் ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*ஸ்டார்: நிதி அழுத்தத்தின் காரணமாக, உரிமத்தை இழந்து வெளியேறியது.
*OPPO: இந்தியா- சீனா அரசுகளுக்கிடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டது.
*Byjus: நிதி இழப்புகளின் காரணமாக, ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*Dream11: ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் & ஒழுங்குபடுத்துதல் மசோதா 2025, தடை செய்யப்பட்டுள்ளது.
News August 24, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪கனிமொழிக்கு <<17502789>>பெரியார் <<>>விருது.. திமுக அறிவிப்பு
✪தமிழுக்கு நிதி <<17502734>>ஒதுக்க <<>>மனமில்லை.. ஆ.ராசா விமர்சனம்
✪10% <<17500685>>வாக்குறுதிகளை <<>>கூட திமுக நிறைவேற்றவில்லை.. EPS
✪<<17502649>>கிரிக்கெட்டில் <<>>இருந்து ஓய்வு பெற்றார் புஜாரா
✪விஜய், <<17500901>>அஜித் <<>>போலதான் SK.. முருகதாஸ் புகழாரம்.