News July 1, 2024
புயல்: இந்திய அணி நாடு திரும்புவதில் சிக்கல்

டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்படாஸ் தீவுக்கு ‘பெரில்’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியின் வீரர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, இந்திய அணியை தனி விமானத்தில் டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News September 20, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.
News September 20, 2025
லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
News September 20, 2025
TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.