News November 28, 2024
புயல் உருவாக வாய்ப்பில்லை..!

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட இது, தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கவுள்ளது. காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை மறுதினம் காலை (நவ.30) இது கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கரையை கடக்கையில் வட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
டியூசன் டீச்சருக்கு நேர்ந்த அவலம்

சேலத்தில் டியூசன் டீச்சர் பாரதியின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆண் நண்பரான தனியார் ஹாஸ்பிடலின் CEO உதய்சரண், பாரதியின் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் பாரதி மறைந்த அதிமுக பிரமுகர் டெல்லி ஆறுமுகத்தின் மகள் ஆவார்.
News December 10, 2025
ஆண்களே இதை கவனிக்கிறீர்களா?

ஹேர் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், தலைமுடி பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஷாம்புவை தேர்வு செய்யும்போது பின்வரும் அம்சங்களை கவனிக்கவும்: ▶Scalp-க்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்யவும். ▶வறண்ட முடிக்கு சல்பேட் ஃப்ரீ ஷாம்பு சிறந்தது. ▶ஆயில் Scalp-க்கு clarifying ஷாம்பு ▶முடி உதிர்வுக்கு காஃபைன் ஷாம்பு ▶பொடுகு தொல்லைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் ஷாம்பு பயன்படுத்தவும். SHARE IT!
News December 10, 2025
இவைதான் உலகின் பெரிய நாடுகள்! PHOTOS

உலகில் மிகவும் பிரபல நாடுகளை, நாம் பெரிய நாடுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நிலப்பரப்பின் அடிப்படையில் பெரிய நாடுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? உலகின் டாப் 10 பெரிய நாடுகளின் போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நாம் நினைத்துக்கூட பார்க்காத நாடுகளெல்லாம் உள்ளன. SHARE.


