News November 30, 2024
47 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் புயல்

ஃபெஞ்சல் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்து அடுத்த 2 நாள்கள் மேற்கு நோக்கி நகர இருக்கிறது. அப்போது, அது திருவண்ணாமலை, சேலம், கோவை மாவட்டங்களை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், 47 ஆண்டுகளுக்குப் பின் கோவை எதிர்கொள்ளும் புயல் இதுவாகத்தான் இருக்கும். இதனால், கொங்கு மண்டலத்தில் சுமார் 20 செ.மீ. வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
Similar News
News December 8, 2025
மீண்டும் எப்போது வருவார்கள் Ro-Ko?

ஆஸி., & SA அணியை துவம்சம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய Ro-Ko ஜோடி மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்கள் என்ற அட்டவணை வெளிவந்துள்ளது. ஜனவரியில் நியூசிலாந்து தொடர், ஜூனில் ஆப்கானிஸ்தான் தொடர், ஜூலையில் இங்கிலாந்து தொடர், செப்டம்பரில் வங்கதேச தொடர், செப்டம்பர் – அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்து தொடர் என 2026-ல் மட்டும் 6 சீரிஸில் Ro-Ko விளையாடவுள்ளனர்.
News December 8, 2025
வெறும் வயிற்றில் தேங்காய்: இவ்வளவு நன்மைகளா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 கிராம் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு பிரச்னைகள் வருவதில்லை. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. *சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு நல்லது * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம் அதிகப்படியான தேங்காயும் சாப்பிடக்கூடாது.
News December 8, 2025
Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.


