News October 21, 2024

உருவாகிறது ‘டானா’ புயல்

image

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது நாளை மறுதினம் உருவாகி, ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி கரையை கடக்குமென கணித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிகிறது.

Similar News

News July 6, 2025

உலக சாதனை படைத்த Vice Captain ரிஷப் பண்ட்!

image

இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டில் மாபெரும் ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் ஃபார்மெட்டில், வெளிநாட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்(24 சிக்சர்கள் – ENG) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ்(21 சிக்சர்கள் – SA), மேத்யூ ஹைடன் (19 -IND), ஹேரி ப்ரூக் (16- NZ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News July 6, 2025

சிக்கன் விலை உயர்வு

image

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால் தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை இன்று ₹5 முதல் ₹10 வரை அதிகரித்துள்ளது.

News July 6, 2025

தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!

image

அமித்ஷா நாளை(ஜூலை 7) சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார். மேலும், பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!