News October 23, 2024
உருவானது ‘டானா’ புயல்

வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
ராஜ்யசபா சீட்: பிரேமலதா கொடுத்த புது விளக்கம்

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரேமலதா புது விளக்கத்தை கொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா MP தருவதாக அதிமுகவினர் உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025-ம் ஆண்டிலா 2026-ம் ஆண்டிலா என்று கூறவில்லை. நாங்கள் 2025 என நினைத்ததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால், எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
2.60 லட்சம் உக்ரைனியர்களின் கதி என்ன?

போர் காரணமாக 2.60 லட்சம் உக்ரைனியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு பைடன் அரசு வழங்கிய சிறப்பு சலுகைகளை டிரம்ப் அரசு தாமதப்படுத்துகிறது. மேலும், டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகளால், 2026 மார்ச் 31-க்கு பிறகு அவர்களால் அங்கு வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், போர் நிறுத்தம் இழுபறியாகி வருவதால், என்ன செய்வது என்றே தெரியாமல் அம்மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
News November 24, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


