News April 25, 2025

போரை நிறுத்துங்கள்.. புடினிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

image

உக்ரைனை உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், கீவ் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மிகவும் மோசமான நேரம். புதின் நிறுத்துங்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News April 25, 2025

ராணுவ உடை கடைகளுக்கு கிடுக்குப்பிடி

image

பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 25, 2025

6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

image

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

இன்சூரன்ஸில் பயங்கரவாத மரணமும் உள்ளடங்குமா?

image

‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

error: Content is protected !!