News October 4, 2025
மாறிமாறி குற்றஞ்சாட்டுவதை விட்டுவிடுங்க: மு.க.ஸ்டாலின்

கரூர் துயரத்தில் திமுக கூட்டணி கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து CM ஸ்டாலின், துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என அறிவுறுத்தியுள்ளார். இனி இப்படி ஒரு பெருந்துயரம் நடக்கக்கூடாது. இதற்காக அனைவரது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
Similar News
News March 13, 2026
மோனாலிசா திருமணம் லவ் ஜிகாத்தா?

கும்பமேளாவில் பிரபலமான<<19356967>>மோனாலிசா <<>>தனது காதலரான ஃபர்மான் கானை கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கேரளா போலீஸ் உதவியுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த கல்யாணம் லவ் ஜிகாத்தா என செய்தியாளர்கள் மோனாலிசாவிடம் கேட்டனர். அதற்கு, இருவரும் மதம் மாறவில்லை என்றும், இது லவ் ஜிகாத் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
News March 12, 2026
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. வெளிப்படையாக அறிவித்தார்

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்தது. இந்நிலையில், 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டணி பற்றிய தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதன் மூலம், TN-ல் 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது.
News March 12, 2026
டெல்லிக்கு செல்ல தயாராகும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, மார்ச் 15-ம் தேதி விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, வரும் 14-ம் தேதி மாலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்ல உள்ளார். முன்னதாக கடந்த 10-ம் தேதியே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பணிகளை சுட்டிக்காட்டி ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டிருந்தார். அதனால், ஆஜராகும் தேதியை சிபிஐ மாற்றியது குறிப்பிடத்தக்கது.


