News April 1, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
Similar News
News November 29, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹9,000 உயர்ந்தது

<<18419399>>தங்கம் விலையை<<>> தொடர்ந்து வெள்ளி விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. வெள்ளியின் விலை இன்று(நவ.29) கிராமுக்கு ₹9 உயர்ந்து ₹192-க்கும், கிலோ வெள்ளி ₹9,000 உயர்ந்து ₹1,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹20,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 29, 2025
டிட்வா புயல்: இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

டிட்வா புயலால் <<18410040>>இலங்கை<<>> கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியா சார்பில் இன்று காலை இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ஆபரேஷன் சாகர்பந்து என்ற பெயரில், சுமார் 12 டன் எடையுள்ள நிவாரண பொருள்கள் கொழும்புவில் தரையிறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News November 29, 2025
நடிகையின் காலில் விழுந்து ஆசிபெற்ற ரஜினிகாந்த் (PHOTO)

நடிகர் ரஜினிகாந்த், மூத்த நடிகை வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற போட்டோ டிரெண்டாகிறது. சென்னையில் 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஜினிகாந்த், வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார விருது வழங்கி கவுரவித்தார். அப்போது, வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து ஆசிபெற்றார். ரஜினியே ஆசிபெற்ற நடிகை யார் என இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் இணையத்தில் தேடி வருகின்றனர்.


