News March 22, 2025
25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்துக

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இக்கூட்டத்தின் தீர்மானங்கள் PM மோடியை சந்தித்து அளிக்கப்படும் எனக் கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கங்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 9 – ஆனி 25 ▶ கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: சதுர்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News July 9, 2025
விமான இன்ஜினில் சிக்கிய ஒருவர் பலி

இத்தாலியில் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்த போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்ஜினில் உள்ளிழுக்கப்பட்டுள்ளார். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
News July 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.