News March 30, 2024

ஆப்கனில் மீண்டும் அமலுக்கு வரும் கல்லடி தண்டனை

image

ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லடி, கசையடி அளிக்கும் தண்டனையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தலிபான் முல்லா ஹிபத்துல்லா, “காபூலைக் கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது. ஷாரியத் சட்டத்தை விரைவில் அமல்படுத்தப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 17, 2026

செங்கையில் லட்ச லட்சமாய் சிக்கிய பணம்!

image

செங்கல்பட்டு: மதுராந்தகம் பகுதியில், நேற்று பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற காரை மடக்கி சோதனை செய்ததில், 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதற்கான உரிய விபரம் அளிக்காததால், மதுராந்தகம் தேர்தல் அலுவலரிடம், பணத்தை பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அதேபோல், மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் காரில் சோதனை செய்த போது, 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 17, 2026

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

image

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!