News August 8, 2025
சரிவுடன் முடிந்த பங்கு வர்த்தகம்

டிரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு, பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 765 pts குறைந்து 79,857 pts-லும், நிஃப்டி 232 pts சரிந்து 24,363 pts-லும் முடிவடைந்தது. Bharti Airtel, Tata Motors, Kotak Bank, Mahindra & Mahindra, Axis Bank, Reliance பங்குகள் கடும் சரிவில் முடிய, NTPC, Titan, Trent, ITC, Bajaj Finserv பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.
Similar News
News August 8, 2025
எந்த போர்டாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்: அமைச்சர்

CBSE உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 8, 2025
பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு

PM மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் MP கனிமொழி. இது தொடர்பாக தனது X பதிவில், பிரதமரை இன்று நேரில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு மாற்று முனையம் அமைக்க உதவ வேண்டும் என தான் கோரிக்கை வைத்ததாகவும், மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த அளித்த ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 8, 2025
சச்சின் சாதனையை ரூட் தகர்ப்பார்: கிரிக்கெட் ரவுண்டப்

*அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவரது உழைப்புக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என கம்பீர் கூறியுள்ளதாக தகவல்.
* டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பதோடு 18,000 ரன்கள் குவிப்பார் என முன்னாள் இங்கி., வீரர் மண்டி பனேசர் கணிப்பு.
*ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார் டெவான் கான்வே.
*WI vs PAK முதல் ODI நாளை துவங்குகிறது.