News April 1, 2025
பங்குச்சந்தைகள் கடும் சரிவு

நிதியாண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவினை கண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 354 புள்ளிகளையும் சென்செக்ஸ் 1390 புள்ளிகளையும் இழந்துள்ளது. கடந்த சில நாள்களாக மேல் நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச்சந்தை, இன்று சரிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News April 2, 2025
எந்த நேரம், எதற்கு நல்லது?

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம். *5am-7am:பெருங்குடல் நச்சுநீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். ரிலாக்ஸாக இருங்கள்.
News April 2, 2025
ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
News April 2, 2025
கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது யார் என நாட்டு மக்களிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டபோது மத்தியிலும், தமிழகத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கச்சத்தீவை ஒப்படைத்த காங்கிரஸூடன் திமுக ஏன் கூட்டணியில் உள்ளது எனவும் வினவினார்.