News April 1, 2025
நிதியாண்டின் முதல் நாளே பங்குச் சந்தைகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 902 புள்ளிகள் சரிந்து 76,512 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 23,313 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் நாளை(ஏப்.2) முதல் அமலுக்கு வருவது உள்ளிட்டவையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News February 22, 2026
விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும்: திமுக அமைச்சர்

விஜய் பற்றிய கேள்விக்கு அமைச்சர் காந்தி கலகலப்பாக பதிலளித்துள்ளார். விஜய் வேலூர் விசிட் பற்றி பேசிய அவர், முதலில் தனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என கூறினார். பின்னர், விஜய் படங்களில் நல்லா கை நீட்டுவார், சட்டையை மடிச்சு விடுவார் எனவும், ஆனால் அது வேறு அரசியல் வேறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், யாருமே குறை சொல்ல முடியாது அளவுக்கு திமுக ஆட்சி நடப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News February 22, 2026
இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன்!

வரும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, ராஜ்யசபா தேர்தலிலும் போட்டியிடவில்லை என TTV தினகரன் கூறியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். TN-ல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில் TTV தினகரன் சீட்டு கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், TTV-ன் இந்த முடிவு EPS-க்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News February 22, 2026
திமுகவுக்கு ஓபிஎஸ் வந்தால் மகிழ்ச்சி: தங்க தமிழ்ச்செல்வன்

திமுகவுக்கு OPS வந்தால் மகிழ்ச்சி தான் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாக இருந்தனர். பின்னர், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்து OPS-க்கு தேனியில் நெருக்கடி கொடுத்தார். இதனால் OPS திமுகவில் இணைந்தால், மீண்டும் மோதல் ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார். இது திமுக தலைமையின் அறிவுறுத்தலாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.


