News September 5, 2025
ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

GST மறுசீரமைப்புக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இன்று(செப்.5) வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 294 புள்ளிகள் உயர்ந்து 81,012 புள்ளிகளிலும், நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24,818 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. HDFC Life, Wipro, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
Similar News
News September 7, 2025
பிரபல நடிகை அனுஷ்கா மோனி கைது

மும்பையில் பாலியல் புகாரில் பெங்காலி நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ்(41) கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் கையும் களவுமாக அவர் சிக்கியுள்ளார். வாடிக்கையாளர் போன்று 2 பேரை அனுப்பி, அவர்களிடம் பணம் பெற வந்த நடிகை அனுஷ்காவை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும், அவரிடம் சிக்கி இருந்த நடிகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சீன அதிபரை சந்திக்கும் டிரம்ப்..!

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீனாவின் பிடியில் இந்தியா, ரஷ்யா சென்றுவிட்டதாக டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெறுவதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News September 7, 2025
மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடவே கூடாது!

மீன் சாப்பிடுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், மீனுடன் சேர்த்து சில உணவு பொருள்களை சாப்பிடுவது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். அந்தவகையில், மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுப் பொருள்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா பட்டியலிட்டுள்ளார். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.