News December 18, 2024
மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்- காரணம் என்ன?

அந்நிய நிதி வெளியேற்றம் & இன்றிரவு வெளியாகும் அமெரிக்க FED வங்கி வட்டி விகித முடிவு குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளனர். இதனால் வாரத்தின் 3வது நாளாக இன்றும் Sensex & Nifty சரிவுடன் முடிந்தது. எனர்ஜி, வங்கி, மெட்டல், மீடியா பங்குகள் 0.5% – 2% வரையிலும், Midcap & Smallcap குறியீடுகள் 0.5% வரையும் சரிந்தன. இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி, டோக்கியோ பங்கு சந்தையும் சரிவு கண்டது.
Similar News
News July 5, 2025
இன்றே உலகம் அழியும் நாள்? அதிர்ச்சி கணிப்பு

‘புதிய பாபா வாங்கா’ என அழைக்கப்படும் ரியோ தாட்சுகி, இன்று ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கும் என கணித்துள்ளார். நேற்று முன்தினம் ககோஷிமாவில் நிலநடுக்கம், ஷின்மோ எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அவரது கணிப்பு உண்மையாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். பலர் சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்துள்ள போதிலும், ஜப்பான் வானிலை மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
News July 5, 2025
ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

*நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தால், அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காதீர்கள். அதை நேருக்கு நேர் சந்தித்து அதிலிருந்து வளருங்கள். * உயர்ந்த இலட்சியங்கள் ஒருபோதும் தாழ்ந்தவற்றுக்குக் கீழ்ப்படியக்கூடாது. *பெரும்பாலான அற்புதங்கள் ஏதோ ஒன்றைச் செய்வதன் மூலம் நிகழ்வதில்லை, ஆனால் சில அபத்தமான செயல்களைச் செயல்தவிர்ப்பதன் மூலம் நிகழ்கின்றன.
News July 5, 2025
ஜூன் 23-ல் டிரிபிள் டிரீட்… ரசிகர்களே!

ஜூன் 23 சூர்யா ரசிகர்களுக்கு 3 சூப்பரான அப்டேட் வருதாம். தமிழில் RJ பாலாஜி, தெலுங்கில் வெங்கி அட்லூரி, மலையாளத்தில் ஜீத்து மாதவன் என அடுத்தடுத்து 3 பேருடன் இணைகிறார் சூர்யா. அவரது பிறந்தநாளில் இந்த 3 படங்களிலிருந்தும் அப்டேட் வரப்போகிறதாம். கருப்பு படத்திலிருந்து கிளிம்ஸ், வெங்கி படத்தின் போஸ்டர், ஜீத்து மாதவன் பட அறிவிப்பு என வருகிறது என்கிறார்கள். நீங்க எந்த படத்துக்கு வெயிட்டிங்?