News April 15, 2025
உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
Similar News
News January 5, 2026
தேர்தல் கூட்டணி: முடிவை மாற்றினார் பிரேமலதா

ஜன.9-ம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா கூறியிருந்த நிலையில், தனது முடிவை மாற்றியுள்ளார். இன்று மா.செ.க்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ளது. இதன்பின் பேசிய பிரேமலதா, பொங்கலுக்கு பிறகுதான், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதாகவும், தேர்தலுக்குள் கூட்டணிகளில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சூசகமாக கூறினார்.
News January 5, 2026
கனிமொழிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

இன்று பிறந்தநாள் காணும் கனிமொழிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், விஜய்யும் போனில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள் எனவும், நீங்கள் விரும்பியது அனைத்தும் கைகூட வாழ்த்துகிறேன் என்றும் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 5, 2026
வீட்டில் Air Fryer இருக்கா? அப்ப இத கவனிங்க!

Air Fryer பயன்பாடு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இன்னும் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இதில் பெரிதாக அச்சுறுத்தல் இல்லை என சொல்லும் நிபுணர்கள் சில டிப்ஸ்களை கூறியுள்ளனர். *சமதளத்தில் வைக்கவும் *அருகே எரியும் பொருள்கள் இருக்கக்கூடாது *இதை சுற்றி காற்றோட்டம் இருக்க வேண்டும் *User Manual-ஐ படிக்கவும் *சமையல் டிரேவை சுடுநீரில் மென்மையான பஞ்சு (அ) துணி வைத்து சுத்தம் செய்யவும்.


