News April 1, 2024
ஏற்றத்துடன் பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி (10;45 AM)) பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்ந்து 74,114 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி168 புள்ளிகள் உயர்ந்து 22,495 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News January 18, 2026
வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: CM ஸ்டாலின்

கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், வாசிப்பு மூலம் அறிவுத் தீ வீடுகள்தோறும் பரவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவு பரிமாற்ற நிகழ்வாகவே பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அறிவை பகிர்ந்து கொள்ளவும் TN சிறந்த மாநிலமாகும் என்றும் குறிப்பிட்டார்.
News January 18, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 18, 2026
தவெகவில் இணைய திட்டமா? மாணிக்கம் தாகூர் விளக்கம்

திமுக கூட்டணியில் இருந்து காங்.,-ஐ வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக SM-ல் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அந்த தகவலை எக்ஸ் தளத்தில் டேக் செய்து பதிலளித்துள்ள மாணிக்கம் தாகூர், ‘அல்றசில்ற ITwing கனவு பலிக்காது கண்ணா’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் உண்மையான காங்கிரஸ்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.


