News July 24, 2024
பட்ஜெட் தாக்கத்தில் இருந்து மீளாத பங்குச்சந்தை

வாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 231 புள்ளிகள் சரிந்து, 80,200 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து, 24,425 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. பங்கு வர்த்தக லாபம் மீதான STCG, LTCG, STT ஆகிய வரிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், சந்தை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 11, 2026
விழுப்புரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
ஒரே இடம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் மோடி!

நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், <<19339925>>பாஜகவை CM ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்<<>> செய்திருந்தார். அதற்கு அதே திருச்சியில் இன்று மாலை PM மோடி பதிலடி கொடுக்க உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற உள்ளனர்.
News March 11, 2026
மக்கள் பீதியடைய வேண்டாம்: ஷோபா கரண்ட்லஜே

போரினால் நம் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90% மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளது; இந்நிலையில் கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை பாதிக்கும் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


