News February 11, 2025

பங்குச்சந்தை சரிவு: ரூ.10 லட்சம் கோடி மாயம்

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. சர்வதேச அளவில் நெகடிவான மார்க்கெட் நிலவரம், டாலர் மதிப்பு உயர்வு, டிரம்பின் தடைகள் ஆகியவற்றால் சந்தை சரிந்தது. மதியம் 1 மணி நிலவரத்தின் போதே, நிப்டி 330 புள்ளிகள் குறைந்து 23,048 ஆகவும், சென்செக்ஸ் 1074 புள்ளிகள் சரிந்து76,223 ஆகவும் இருந்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு குறைந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News February 11, 2025

விஜய்க்கு Transgenders மத்தியில் எழுந்த எதிர்ப்பு

image

தவெக கட்சியில் 28 அணிகளை உருவாக்கி அதன் பட்டியலை இன்று வெளியிட்டிருந்தார் விஜய். அதில், திருநர் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் வித்யா, இந்தப் பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறார். ’9’ என்ற இந்த இழிவை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் நாங்கள் சுமக்க வேண்டும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

News February 11, 2025

எந்த நாட்டில் எவ்வளவு பில்லினியர்கள்?

image

எந்த நாட்டில் எத்தனை பேர் ₹8,700 கோடிக்கு மேல் ($1 பில்லியன்) சொத்து வைத்திருக்கின்றனர் என்று பார்க்கலாம்.
அமெரிக்கா – 813 பேர்
சீனா – 406 பேர்
இந்தியா – 200 பேர்
ஜெர்மனி – 132 பேர்
ரஷ்யா – 120 பேர்
இத்தாலி – 73 பேர்
பிரேசில் – 69 பேர்

News February 11, 2025

த்ரிஷா சொல்வது உண்மையா? பொய்யா!

image

புதிய மோசடி ஒன்று பரவுவதை பாப் பாடகர் கான்யே வெஸ்ட் சுட்டிக் காட்டியிருந்தார். பிரபலங்கள் சம்மந்தம் இல்லாத பொருளை சோசியல் மீடியாவில் ப்ரமோட் செய்வார்கள். பின்னர், அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் கொடுப்பார்கள். இதற்கு பெரிய சன்மானம் கிடைக்கும். த்ரிஷாவும் அப்படியான உத்தியை கையில் எடுத்தாரா அல்லது <<15430809>>X பக்கம் உண்மையிலேயே ஹேக் ஆனதா<<>> என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.

error: Content is protected !!