News June 26, 2024
வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தை கண்டன. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 78,509 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 23,832 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
Similar News
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 28, 2025
பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.


