News April 18, 2025
ஸ்டெய்னின் ‘300’ கமெண்ட்ஸ்.. கலாய்த்த MI!

IPL தொடரில் SRH அணிதான் முதலில் 300 ரன்களை விளாசும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக உள்ளது. MI vs SRH அணிகளின் மேட்ச்சுக்கு முன்னர், டேல் ஸ்டெய்ன், SRH இந்த போட்டியில் 300 ரன்களை விளாசும் என பதிவிட்டார். மேட்ச்சுக்கு பிறகு, MI வெளியிட்டுள்ள பதிவில், ‘டேல் ஸ்டெய்ன் சொன்னது போல 328 ரன்கள் எடுத்தது (இரு அணிகளின் ரன்களையும் சேர்த்து) என கலாய்த்துள்ளது.
Similar News
News October 19, 2025
சாபத்தால் தீபாவளி கொண்டாடாத கிராமம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலின் சம்மூ கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் தீபாவளியை கொண்டாட தயாரானார். அப்போது இறந்த அவளது கணவரின் உடல் வீட்டிற்கு வர, உடன்கட்டை ஏறினாள். அதற்கு முன்பு, ‘இந்த ஊர் மக்கள் தீபாவளியை கொண்டாடவே முடியாது’ என சாபமிட்டாள். இதன் பிறகு தீபாவளி கொண்டாடியபோதெல்லாம் இறப்பு (அ) பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாபத்தாலேயே இவ்வாறு நடப்பதாக, இதுவரை அவர்கள் தீபாவளி கொண்டாடவில்லை.
News October 19, 2025
ராசி பலன்கள் (19.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
VDK உடன் திருமணமா? வெட்கப்பட்ட ரஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் ரஷ்மிகா மந்தனா கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே, ரஷ்மிகா அணிந்திருந்த மோதிரமும் பேசுபொருளானது. இந்நிலையில், இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கேட்டபோது, வெட்கப்பட்டுக் கொண்டே ரஷ்மிகா நின்றதால், ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்துவிட்டனர். ஆனால், இல்லை என்று மறுத்துவிட்டார். இருப்பினும், ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.