News April 27, 2025
ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகள்

*உங்கள் நேரம் குறைவு, எனவே மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். *புதிய யோசனைகளை உருவாக்கி செயல்படுத்துபவர்களே உண்மையான தலைவர்கள். *எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது தான். *சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் ஒரு செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள். *நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, அதில் சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள்.
Similar News
News January 9, 2026
டெல்லி செல்லும் தமிழக காங்., தலைவர்கள்!

டெல்லியில் வரும் ஜன.18, 19-ம் தேதிகளில் TN காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். ஆட்சியில் பங்கு, தவெகவுடன் கூட்டணி போன்ற பேச்சுகள் தமிழக காங்கிரஸ் மீது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களே பெரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் டெல்லி மீட்டிங் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 9, 2026
எந்த கோயிலில் என்ன பிரசாதம் ஸ்பெஷல் தெரியுமா?

கோயில்கள் பல்வேறு காரணங்களால் பிரபலமாக உள்ளன. அதில், சில கோயில்கள் பிரசாதங்களுக்கு பெயர்பெற்றவை. பிரபலமான சில கோயில்களையும், அங்கு வழங்கப்படும் பிரசாதங்களையும் மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்க ஊர் கோயில்களில் என்ன பிரசாதம் கிடைக்கும் என்று கமெண்ட்ல சொல்லுங்க.
News January 9, 2026
பாமக வேட்பாளராக காந்திமதி அறிவிப்பு

ராமதாஸ் தரப்பில் பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், 2026 தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என குறிப்பிடவில்லை. அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ‘பாமக சார்பில் வேட்பாளர்’ என ராமதாஸ் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


