News September 3, 2025
சிக்ஸ் பேக் கொண்டு வர ஸ்டெராய்டு? SK விளக்கம்

தன்னைப் பற்றி யூடியூபர்கள் வதந்தி பரப்பியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் வைக்க ஸ்டெராய்டு பயன்படுத்தியதாகவும், அதனால் தான் நோய்வாய் பட்டதாக, தன்னுடைய போட்டோவை எடிட் செய்து யூடியூபர்கள் பொய்யான thumbnail வைத்து செய்திகளை பரப்பியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், சிங்கிள் பேக் கூட தனக்கு இல்லை என்றும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Similar News
News September 4, 2025
சப்பாத்தி, பரோட்டாவுக்கு GST கிடையாது

காக்ரா (Khakra), சப்பாத்தி, பரோட்டா ஆகிய உணவுப் பொருள்களுக்கு GST-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட Dry Fruits மற்றும் Nuts வகைகளுக்கு 18%-லிருந்து 5% ஆக GST குறைக்கப்பட்டுள்ளது. GST கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய FM நிர்மலா சீதாராமன், பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் மீதான <<17605867>>GST<<>> வரி குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
News September 4, 2025
GST சீர்திருத்தம் வாழ்க்கையை மேம்படுத்தும்: மோடி

12%, 28% GST வரம்புகள் நீக்கப்பட்டு 5%, 18% என்ற சீர்திருத்தங்கள் செப்.22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் GST-யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறு வணிகர்கள் உள்பட அனைவரும் தொழில் செய்வதை எளிதாக்கும் என்றும் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News September 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க