News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
நாகை: திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலம்!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான நவநீதேஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், இன்று Ex. MLA <<18692753>>சி.கிருஷ்ணன்<<>> அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் OPS, டிடிவி தினகரன் இணைவார்களா என செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு, பொங்கலுக்கு முன் இருவரும் இணைவார்கள், அதிமுக Ex அமைச்சர்கள் சிலரும் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
News December 28, 2025
மீனவர்கள் கைதை தடுக்க CM ஸ்டாலின் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளால், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


