News October 29, 2025
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்

*மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.
*நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
*நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டே இருந்தால், உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
*‘அறியாமை’ என்பது அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல, அது அறிவின் மாயையே ஆகும்.
*யார் விதியும் இங்கு எழுதப்படவில்லை.
Similar News
News October 29, 2025
சமஸ்கிருத எதிர்ப்பால் தமிழ் வளராது: துணை ஜனாதிபதி

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் மட்டுமே தமிழ் மொழி வளராது எனவும் கூறியுள்ளார். மேலும், குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 29, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. அமைச்சர் இரங்கல்!

தென் மாவட்டங்களில் ‘மக்கள் நாயகன்’ என அழைக்கப்பட்ட <<18127223>>Dr.ராஜசேகர்<<>> மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட சேவைகள் நம் அனைவரது மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் புகழாரம் சூட்டினார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ₹20 – ₹50 வரை மட்டுமே பீஸ் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை அளித்த Dr.ராஜசேகர் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News October 29, 2025
IND vs AUS: மழை குறுக்கிடுமா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 போட்டி இன்று தொடங்குகிறது. ODI தொடரை 2- 1 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், மழை அச்சுறுத்தல் உள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெறும் போட்டியில், 25% வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


