News March 3, 2025
அண்ணாமலை பேச்சுக்கு எஸ்டிபிஐ எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படை கைது செய்வதாக கூறிய அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, அதை செய்யத்தவறியதோடு, அவர்கள் மீதே அவதூறு பரப்பி வருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2025
புகைப் பழக்கம் இல்லையா? 6 நாள் லீவு

ஆபிஸ் டென்ஷன், ஒரு தம் போட்டு வரலாம் என பிரேக் எடுப்பவர்கள் அதிகம்! இப்படி நேர விரயம் செய்வதை தடுக்க டோக்கியோவில் இயங்கும் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 6 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு அளிப்பதுதான் அது. இதனால், அலுவலக நேரத்தில் ஊழியர்கள் புகை பிடிப்பதை குறைக்கலாம் என்பது நிறுவனத்தின் எண்ணம். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 3, 2025
20 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றியவர் காலமானார்

‘தங்க கைகளை கொண்டவர்’ எனப் போற்றப்படும் ரத்த தானத்தில் சிறந்த ஜேம்ஸ் ஹாரிசன்(88) ஆஸ்திரேலியாவில் காலமானார். 18 வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கிய அவர், தன் 81 வயது வரை தொடர்ந்தார். இவரது ரத்தத்தில் Anti-D என்ற மிக அரிதான ஆன்டிஜென் உள்ளது. இது குழந்தைகளின் உயிரை பறிக்கும் ரத்தநோயை (HDFN) தடுக்கவல்லது. தன் ரத்த தானத்தின் மூலம், இவர் இதுவரை 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். RIP!
News March 3, 2025
கார்ல்சன் சர்ச்சை ஜீன்ஸ்… ஏலத்தில் அடித்த ஜாக்பாட்!

பொதுவாகவே பிரபலங்கள் அணிந்த ஆடைகள் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம். அந்த வரிசையில் செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனும் இணைந்துள்ளார். 2024 BLITZ செஸ் தொடரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால், விதிகளை மீறியதாக ஒரு போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த ஜீன்ஸ் பேண்ட் ஏலம் விடப்பட்டது. அதனை இந்திய மதிப்பில் சுமார் 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.